யாழில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி ஆரம்பம்

0

உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில், மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “யாழில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களின் விபரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

மேலும் பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீள்குடியமராத குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் அவர்கள், தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே இடம்பெயர்ந்து இதுவரை காலமும் மீள்குடியமராத மக்கள், தங்கள் வசிக்கும் பிரதேச செயலகத்துக்குச் சென்று, தங்களுடைய பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here