யாழில் பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டப்பட்ட 150 வருடங்கள் பழமையான மரம்

0

யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் அருகில் உள்ள 150 வருடங்கள் பழமையான மரம் பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டப்பட்டுள்ளது.

ஆணைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக வட்டுக்கோட்டை செல்லும் வீதியின் புனரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ள நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குறித்த மரத்தை வெட்டுவதற்கு சென்றிருந்தபோது பொதுமக்கள் சிலர் கடுமையான எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

இதனையடுத்து இன்று(02) தீவிர பொலிஸ் பாதுகாப்புடன் 150 வருடங்கள் பழமையான மரம் வெட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here