யாழில் பேருந்து மோதி விபத்து! இளைஞர் ஒருவர் பலி

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாவகச்சேரி வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்றிரவு 10.40 மணியளவில் இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தை சேர்ந்த 31 வயதான கெவின் கிஷோகுமார் என்பவரே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here