யாழில் புலமை பரிசில் பரீட்சையை எழுதவிடாது குழப்பிய ஆசிரியர்!

0

யாழ்.கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை எழுதவிடாது ஆசிரியை குழப்பியதாக 18 மாணவர்கள் கையெழுத்திட்டு இலங்கை பரீட்சை திணைக்களத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இந்தப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை எதிர்கொண்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பிரச்சனைகள்.

1)பகுதி 1 விடைத்தாள் வாங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே செய்கைவழித்தாழைப் பெற்றுக் கொண்டமையால் செய்ய வேண்டிய பல வினாக்கள் தவறவிடப்பட்டுள்ளன.

2)கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பென்சிலால் விடையளிக்க முடியுமாக இருந்த போதும் பென்சிலால் விடை எழுதிய மாணவர்களை பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு 15 நிமிடம் இருக்கும் போதே முழுமையாக விடைகளை அழித்து பேனாவால் விடையளிக்குமாறு பணித்ததன் காரணமாக மாணவர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

3)மணிக்கூடு பரீட்சை நடைபெற்ற மண்டபத்தில் வைக்கப்படாமை நேரம் கவனித்து விடையளிக்க முடியாமல் போனது.

4)முன்னறிவித்தலின்றி விடைத்தாள்கள் பெற்றுக் கொள்ளப்பட்டமை. போன்ற காரணங்களால் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையை முழுமையாக எழுத முடியவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here