யாழில் பால் புரைக்கேறி உயிரிழந்த குழந்தைக்கும் கொரோனா

0

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் நேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குழந்தையின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதில் புரைக்கேறி உயிரிழந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here