கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையால், நீண்டகாலமாக திறக்காமல் காணப்பட்ட 200 மாணவர்களுக்கும் குறைந்த ஆரம்பநிலை பாடசாலைகளை இன்றையதினம் (21) திறக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு காரணமாக பாடசாலைகள் எவற்றையும் திறக்க வேண்டாம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் பாடசாலைகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
யாழில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் சிலர் வருகை தந்த நிலையில் பாடசாலை திறக்காததால் மாணவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை, பொலிசார் மற்றும் வலயக்கல்வி உத்தியோகஸ்த்தர்கள் பாடசாலைகளை பார்வையிட்டு பாடசாலைகளின் விபரங்களை திரட்டிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.