யாழில் பழமையான பிள்ளையார் ஆலயம் விசமிகளால் இடித்து அழிப்பு!

0

யாழ்.தென்மராட்சி மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் அமைந்திருந்த மிகவும் பழமையான பிள்ளையார் ஆலயம் இனம்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாகத் தற்போது இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(07) இரவு நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை, குறித்த செயலைச் செய்தவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன்நிறுத்திக் கடும் தண்டனை வழங்கப் பொலிஸார் மற்றும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here