யாழில் பரிதாபம் தாயுடன் சென்ற சிறுவனுக்கு எமனாக மாறிய பாரவூர்தி! 

0

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த விபத்தில் சிறுவன் ஒருவன் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சத்திரத்துச் சந்திக்கு அருகே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, பின்புறமாக லொறி ஒன்று மோட்டார சைக்கிளை மோதியது என்று தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் இருந்து பயணித்த சிறுவன் கீழே வீழ்ந்தபோது, லொறியின் சக்கரம் சிறுவன் மீது ஏறியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here