யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

0

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பிற்பகல் 6 மணியளவில் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மரத்தில் இருந்த கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய வேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நோயாளர் காவு வண்டியை அழைத்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here