யாழில் நேற்று தடுப்பூசி செலுத்திய பெண் திடீர் மரணம்

0

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீர் உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் நேற்றைய நாளே கொரோனா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையைப் பெற்றுக்கொண்டவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரவு திடீர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

குறித்த பெண் ஏற்கனவே நீரிழிவு நோய்ப்பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here