யாழில் நடந்த பயங்கரம்! இளம் தந்தை படுகொலை

0

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் இன்று (17) அதிகாலை 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here