யாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!

0

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு, தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் அகழ்வுப் பணிகளுக்கான உபகரணங்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றிருந்தனர்.

இந்நிலையில், அங்கு மக்கள் ஒன்றுகூடியதுடன் அகழ்வுப் பணிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதமும் இதே பகுதியில் அகழ்வுப் பணிக்கான ஆயத்தங்கள் இடம்பெற்றன. இதன்போது, கூடிய மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு முயற்சி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here