யாழில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று! அவசரமாக கூடும் செயலணி

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரொனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்று குறைந்தது.

இந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் யாழ். மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10 மணிக்கு கூடி தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ள தாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரின் தலைமையில் சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய துறைசார் அதிகாரிகளுடன் குறித்த செயலணி கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த செயலணி கூட்டத்தின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்ப டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் ஆராயப் படவுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here