யாழில் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

0

யாழ்ப்பாணத்தில் திருமண வீட்டிற்கு சென்ற பெண் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்.நாவாந்துறை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.உடவிலை சேர்ந்த பெண் ஒருவர் நாவாந்துறையில் திருமண வீட்டிற்கு வந்துள்ளார்.

திருமண வீட்டிற்கு வந்த பெண் யாழ்.நகரிலிருந்து 15 வயதான சிறுவனுடன் துவிச்சக்கர வண்டியில் நாவாந துறை சென்று கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த சிறுவனும்,உயிரிழந்த பெண்ணும் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நிலையில் தடுக்கி விழுந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சு.நிமலினி (வயது 42) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here