யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

0

அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட அரச அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திலே தொற்று நிலைமை தீவிரமடையும் காரணத்தினால் நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அவர்கள் ஐம்பதாயிரம் தடுப்பூசிகளை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

அது இன்று மாலை கிடைக்கப் பெறலாம் .அல்லது நாளை காலை கிடைக்கப் பெறலாம். கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு அமைய இதுவரை காலமும் எங்களுடைய மாவட்டத்திற்கு அதிகளவாக இனங்காணப்பட்ட பிரதேசத்திலேயே முதற்கட்டமாக தடுப்பூசிகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கிராம சேவையாளர் பிரிவில் தொற்டுக்கொள்ள அவர்களின் அடிப்படையில் மத்தியில் இதனை நாங்கள் வழங்க உள்ளோம் எனமாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன். தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி கிடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின் மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிக கொரோனா இழப்புக்கள் இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தெரிவுசெய்து அவர்களுக்கு முதல் அடிப்படையில் நாங்கள் தடுப்பூசிகளை வழங்க உள்ளோம்.

முதலில் அந்த கிராம சேவையாளர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசிகளை வழங்க உள்ளோம். இந்தத் திட்டமானது நாடளாவிய ரீதியில் இதே ஒழுங்கில் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இதே ஒழுங்கில் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. யாழ் மாவட்டத்தில் சுமார் 12 அல்லது 13 மத்திய நிலையங்களில் இந்தத் தடுப்பூசிகளின் நாங்கள் வழங்க உள்ளோம். சுகாதார தொண்டர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.

ஆனால் நாங்கள் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இரண்டாம் கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக அதிகமாக தொற்று காணப்பட்ட அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த இடத்துக்கு முன்னேறி வழங்கப்படுகின்றது.

இந்த தடுப்பூசி வழங்குவது தொடர்பான தகவல்களை நாங்கள் குறித்த பிரதேசத்தில் உரிய சுகாதார பணியாளர்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் உதவி புரிவார்கள்.

மக்கள் அவர்களுக்கு என குறித்து ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் நாளை காலை 8 மணி முதல் யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட உள்ளதாகயாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்பான முன்னேற்பாட்டு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாடுபூராகவும் கொரோனாநோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக அரசாங்கத்தினால் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலையிலிருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த செயற்பாடானது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரது வழிகாட்டலுக்கு இணங்க இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி காலை 8 மணியிலிருந்து ஒரு மணி வரை ஒருகட்டமாகவும். அதன் பின்னர் இரண்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை இன்னொரு கட்டமாகவும் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்படவுள்ளது.

தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண பணிப்பாளர் முன்னெடுத்துள்ளனர் எனினும் பொதுமக்கள் அனைவருக்கும் கட்டம் கட்டமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்றவாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு மாத்திரம் அந்த இடங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் அத்தோடு கிராம அலுவலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களினால் தங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என கோரிக்கை விடுத்தால் மாத்திரமே நீங்கள் தடுப்பூசி வழங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

எனவே நீங்கள் தேவையில்லாது அலையாது தங்களுக்குரிய வழிகாட்டல் கிடைத்த பின்னர் நீங்கள் தடுப்பூசியினை பெற செல்லும் இடத்திற்கு செல்ல முடியும் எனத் தெரிவித்ததோடு மேலும் தற்போதுள்ள கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள் அந்த ஒத்துழைப்பினை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து தற்போது பயணத்தடை வேளையிலும் வீதிகளில் நடமாடாது ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

அதேபோல் தொடர்ச்சியாக இந்த ஒத்துழைப்பினை பொதுமக்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.

நான் மட்டுமல்ல யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண பணிப்பாளர் ஆகியோர் சார்பிலும் பொது மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன் பொதுமக்கள் தற்போது எமக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக நமக்கு இந்த நோயினை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here