யாழில் சத்திர சிகிச்சைக்கு தயாராக இருந்த குழந்தைக்கு கொரோனா

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு தயாராக இருந்த 2 வயதான குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான குழந்தை, சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயதும் 6 மாதங்களுமான பெண் குழந்தை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயதும் 8 மாதங்களுமான ஆண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதேவேளை, 6 வயதான சிறுவன் மற்றும் 8, 10 வயது சிறுமிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here