யாழில் கொவிட் தடுப்பூசி செலுத்த காத்திருப்போருக்கான ஓர் அறிவித்தல்!

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், பருத்தித்துறை, தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here