யாழில் கொரோனா தொற்றுக்குப் பலியான 9 மாத குழந்தை

0

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த – யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டிருந்த குழந்தையே இவ்வாறு தொற்றால் உயிரிழந்தது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியானது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் குழந்தை ஒன்று உயிரிழந்தமை இதுவே முதல் முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here