யாழில் கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு

0

யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை நகர் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளுக்காக சுகாதார பிரிவினர் தேடி சென்றிருந்த நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் கல்முனை மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here