யாழில் கொடூர கொலை: வீட்டு வேலைக்கு வந்த இளைஞனால் மூதாட்டி அடித்துக் கொலை!

0

யாழ்ப்பாணம் – கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 73) என்ற மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் உள்ள கதிரை ஒன்றில் ஜெபித்துக்கொண்டிருந்த நிலையிலே தலையில் பெரிய காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இவர் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டில் உதவிக்காக ஒரு நபர் வந்து செல்வார் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதாட்டியின் வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் இன்றைய தினம் கீழே வந்து பார்த்தபோது குறித்த மூதாட்டி தலையில் பாரிய காயத்துடன் கதிரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். கையில் ஜெபப்புத்தகத்துடன் இறந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

அருகில் பூச்சாடி ஒன்று விழுந்து கிடப்பதையும் அவதானித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்,பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here