யாழில் குடும்ப தகராறு! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்

0

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வலி. வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்று (25) மாலை கணவன் – மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் போது 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

கத்திக்குத்து காயத்திற்கு உள்ளன மனைவியின் அவல குரல் கேட்டு, அயலவர்கள் அவரை மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன், தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here