யாழில் காதலன் உயிரிழந்த சோகத்தில் காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு

0

வடமராட்சியில் சுகயீனம் காரணமாக காதலன் உயிர் இழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார்.

இந்நிலையில் யுவதி இன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here