யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்திய பகுதி ஒன்றிலிருந்து எண்ணைவழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடியில் எண்ணெய்ப் படிமங்கள் இருப்பது ட்ரோன் ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதன் தொடர்ச்சியான ஆய்வுகள் விரைவில் நடத்தப்படும் என்று அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன.
குடாநாட்டின் மத்திய பகுதி ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த எண்ணெய்வளத்தை ஆராயும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது குறித்தும் ஆராயப்படுகின்றது.
மன்னாரிலும் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்கம் அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலும் இந்த எண்ணெய் வளம் காணப்படும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.