யாழில் கணவனின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்

0

கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் மனைவி எரிகாயங்களுக்கு உள்ளானார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

கடந்த 22 ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

அடுப்புக்கட்டுக்கு கீழே கணவர் பெற்றோல் போத்தலை வைத்திருந்தமை தெரியாமல் குடும்பப் பெண் நெருப்பு குச்சை போட்டமையால் ஏற்பட்ட தீவிபத்தில் அவர் சிக்கியுள்ளார்.

உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் விழ்ந்துள்ளார்.

எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 நாட்கள் முன்னெடுக்க சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் நேற்று (27) காலை உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here