யாழில் ஒரே நாளில் பதிவாகிய அதிகமான கொரோனா மரணங்கள்

0

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் அதிக எணணிக்கை இதுவாகும்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

அத்துடன், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரும்

கொடிகாமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் வவுனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் நவாலியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதேவேளை, கொடிகாமத்தைச் சேர்ந்த 80 மற்றும் 70 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 209ஆக உயர்வடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here