யாழில் உயிரிழந்த 26 வயது யுவதிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஊடாக பெறப்பட்டிருந்த குறித்த மாதிரி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, உயிரிழந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர் 1வது ஒழுங்கை மடத்தடி, சாவகச்சேரி எனும் முகவரியைச் சேர்ந்த குணேஷ் – தர்ஷிகா (வயது-26) என மருத்துவ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.