யாழில் உயிரிழந்த குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனோ!

0

யாழில்.பிறந்து 24 நாட்களேயான குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நாட்களான குழந்தை , 63 வயதான பெண் மற்றும் 42 வயதான ஆண் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்களுக்கு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது , அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதனை அடுத்து அவர்களது சடலங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மின் தகனம் செய்யவதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here