யாழில் இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்த 4 பெண்கள் கைது!

0

யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாந்துறை பகுதியில் புறா வளர்த்த இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, ஏற்பட்ட முரண்பாட்டு சூழலில் பெண்கள் குழுவொன்று சமரசம் பேச வந்த இளைஞர்கள் நான்கு பேரை தாக்கியது.

அத்துடன் அவர்களின் முகங்களில் மிளகாய் தடவி சித்திரவதை புரிந்த காட்சிகள் காணொளியாக சமுக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.

பெண்களின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர்களில் ஒருவர் கடந்த 27 ஆம் திகதி தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில் இளைஞர் குழுவை தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில பெண்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here