யாழில் இருந்து இளம் தம்பதியரை தேடி வந்த கும்பல் அட்டகாசம்!

0

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி உட்புகுந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் குறித்த வீட்டிற்குள் வாள்களுடன் உட்புகுந்த குழுவினர், அந்த வீட்டுவளாகத்தில் வாடகைக்கு வசித்துவரும் இளைஞரையும், யுவதியையும் தேடியுள்ளனர்.

அத்துடன், அவர்கள் இல்லாத நிலையில் வீட்டின் உரிமையாளர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழில்இருந்து வருகைதந்த நபர்களே குறித்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும், காதல் விவகாரம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிசாரின் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here