யாழில் இரவில் நடந்த பரபரப்பு – இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனோகரா சந்திக்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்றிரவு மின்துண்டிப்பு நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். நகரப் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனையகத்தில் பணிபுரியும் தொல்புரம் மேற்கைச் சேர்ந்த மாயராசா லக்சாந்தன் என்ற இளைஞரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மனோகரா தியேட்டர் சந்திக்கு அருகாமையில் உள்ள ஆலயத்தில் இருவர் வழிபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் திடீரென வந்த இருவர், ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். உடனே அவர் ஐந்து சந்திப் பகுதியை நோக்கி தப்பியோட முயன்றுள்ளார். இருப்பினும் அவர்கள் கலைத்து கலைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இளைஞரின் கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கு வந்த பொதுமக்கள் , படுகாயமடைந்த இளைஞரை பட்டா வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here