யாழில் இரண்டு ஆலயங்கள் தனிமைப்படுத்தல்!

0

பருத்தித்துறையில் இரண்டு ஆலயங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை நேற்று (07) பிற்பகல் முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், பருத்தித்துறை சிவன் ஆலயம் என்பனவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை பேண தவறியதால் ஆலயத்தை வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.

அதேபோன்று பருத்தித்துறை சிவன் ஆலயத்திலும் சுகாதார நடைமுறைகளை மீறி வெளி வீதியில் திருவிழாவை நடத்தியதால் அந்த ஆலய வழிபாடுகளும் வரும் 21ஆம் திகதி வரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

ஆலய நிர்வாகிகளும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here