யாழில் இடம்பெற்ற சுவாரசியம் திருடப்போன வீட்டில் ஓய்வெடுத்த திருடர்கள்

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கிவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தவேளை திருடர்கள் இருப்பதை அவதானித்துவிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

இதன்போது ஒரு திருடன் தப்பித்து சென்ற நிலையில் மற்றையவர் கிராமவாசிகளின் கைகளில் அகப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.பொலிஸ் காவலில் இருப்பவர் மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்தவர். தப்பித்து சென்றவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர். தப்பித்து சென்றவருக்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here