யாழில் இடம்பெற்ற கோர விபத்து! ஒருவர் பலி 3 பேர் ஆபத்தான நிலையில்

0

திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயமடைந்தனர்.

பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த வேன் ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேனில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களையும் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here