யாழில் ஆபத்தை ஏற்படுத்தும் கொரோனா – அதிகரிக்கும் மரணங்கள்

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்தனர்.

இவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயது முதியவர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாங்குளத்தைச் சேர்ந்த 79 வயது ஆண், கச்சேரி நல்லுர் வீதியைச் சேர்ந்த 71 வயது பெண், நெல்லியடி கரணவாயைச் சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதேபோன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தவிர, சாவகச்சேரி ஆதார மருத்துவமனை யில் வரணி – இயற்றாலையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here