யாழில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

0

யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் 5,957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது.

இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 சதவீதம் என அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here