யாழில் அதிரடிப்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம்!

0

யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினர் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனம் மீதே சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் வாகனம் விபத்துக்குள்ளாகியது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். இருப்பினும் கட்டளையை மீறி ஹன்டர் பயணித்தமையால் வாகனத்தின் சில்லுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் ரயர் வெடித்து கட்டுப்பாட்டையிழந்த ஹன்டர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது தப்பி ஓடியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட ஹன்டர் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here