யாழில் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்- முடக்கப்படவுள்ள பிரதேசம்!

0

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவில் சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில் அதிக அளவிலான தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதையடுத்து அந்த பகுதியினை முடக்குவதற்கான விண்ணப்பத்தினை சுகாதாரப் பிரிவினரால் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பம் அரசாங்க அதிபரினால் சிபார்சு செய்யப்பட்டு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர்கால நிவாரண உதவியும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here