யாழில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..!

0

நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களும் சரி கொரோனா மரணங்களும் உச்சம் தொட்டுக்கொண்டே வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக் கிழமை மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் நோயினதொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும், கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும், மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், அளவெட்டியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192ஆக உயர்வடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here