யாழிலும் பதற்றம் – அங்கஜன் அறிக்கை

0

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் முன்பாக நேற்றைய தினம் இரவு கூடிய சிலர் பதாகைக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், “யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். தமது அரசியல் தேவைக்காக உசுப்பேற்றுபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.” என அங்கஜன் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here