இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள சீனிகுழி என்ற பகுதியில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீட்டோடு எரித்து கொன்ற முதியவரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துத் தகராறில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்படி ஹமீத் (79) என்ற முதியவர் மொஹம்மது ஃபைசல் (49), அவரது மனைவி ஷீபா (39), மகள்கள் மீரு (16), அஸ்னா (13) ஆகியோரை வீட்டோடு வைத்து எரித்து கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஹமீது வெளியே இருந்து மகன் உள்ளிட்டோர் படுக்கையறைக்கு வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
பைசலின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரையும், ஹமீது தீ வைத்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
சிலர் காவலர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் அனைவரும் இறந்துள்ளனர்.
ஹமீத் பல ஆண்டு காலமாக தனது இரண்டாவது மனைவியுடன் வேறொரு இடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது இரண்டாவது மனைவியும் ஹமீதை விரட்டிவிட்டதால், அவர் மீண்டும் இந்த வீட்டுக்கு வந்து பைஸலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பைஸலுக்கு குடும்பச் சொத்தை பிரித்துக் கொடுப்பதில் பல ஆண்டு காலமாக சொத்துத் தகராறு இருந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த மசூதி நிர்வாகிகள் தலையிட்டு இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.
நால்வரின் உடல்களும் பொலிசாரால் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.