மொட்டை விட்டு வெளியேறிய முக்கிய புள்ளிகள் -உடைந்தது மஹிந்தவின் பலம்!

0

தென்னிலங்கையின் சமகால அரசாங்கத்தில் அதிகபெரும்பான்மை பலத்துடன் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளது.

எனினும் அண்மைக்கால அரசியல் செயற்பாடு காரணமாக அந்த கட்சிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹோரத் மற்றும் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து எதிரணிக்கு மாறி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அதிருப்தி அடைந்த குழுவொன்று பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here