உக்ரைன் தலைநகருக்கு வெளியே உள்ள தெற்கு நகரங்களான மைகோலேவ் மற்றும் ஒடேசா ஆகிய பகுதிகளுக்கு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி நேற்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த பகுதிகளின் நிலைமையை ஆய்வு செய்த அவர், பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த இரண்டு நகரங்களும் ரஷ்யாவின் முக்கிய இலக்குகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த சில நாட்களாக ரஷ்யா, உக்ரைனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் மீது கவனம் செலுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்து 500 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 5,600 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.