மேற்கு வான்கூவர் பகுதியில் பயங்கர விபத்து

0

மேற்கு வாங்குவர் பகுதியில் முதலாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் ஆறு அம்பியூலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய சுகாதார அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது.

கட்டுபாட்டை இழந்த ஒரு வாகனம் மற்றைய வாகனத்தின் மேல் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் பயணித்த வாகனம் காரணமாக இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தவறான திசையில் பயணித்த வாகனம் இரண்டு வாகனங்களில் சிறிதளவில் மோதுண்டதாகவும் மூன்றாவது வாகனத்தில் கடுமையாக மோதுண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேன் ஒன்றும் கார் ஒன்றும் இந்த விபத்தில் மோதிக்கொண்டதாகவும் வேனை செலுத்திய சாரதி தவறான பாதையில் பயணித்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here