மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதன் படி ஆரம்ப முதலே, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.
திரிணாமுல் காங்கிரஸ் 202 தொகுதிகளில் பிடித்து அமோக வெற்றி பெற்றது.
மேலும் பாஜ.வுக்கு 88 இடங்களே கிடைத்தன.
மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளின் 205 இடங்களில் திரிணாமுல் காங்கிரசும், பாஜக 85 இடங்களிலும், மற்ற இரண்டு கட்சிகள் ஒவ்வொரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.