மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் ரஷ்ய அதிபர்!

0

மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் போர் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் முதன் முறையாக இன்று தேசிய உரையை நிகழ்த்தியுள்ளார்.

மேற்குலக நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தி வருகின்றது.

அதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவை அழிப்பதே மேற்குலகின் நோக்கமாக காணப்படுகின்றது.

உக்ரைன் மக்களை பீரங்கித் தீவனமாக மாற்ற முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் துணைப்படையில் இணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அணிதிரட்டப்படும் அனைத்து குடிமக்களும் முழு ஆயுதப்படை அந்தஸ்தைப் பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இன்று முதல் அணித்திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here