மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள புடின்…!

0

ரஷ்ய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், மிகவும் வேதனையான விளைவுகள் ஏற்படும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றாக புதிதாக ஒன்று கொண்டு வர மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது உலக பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இந்த விளைவுகள் மிக வேதனையானதாக இருக்கும்.

நட்பற்ற நாடுகளால் கூட ரஷ்ய எரிவாயு பயன்பாட்டை நிறுத்த முடியவில்லை என அவர் கூறினார்.

எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான பணம் செலுத்துதலில் பிரச்சனை இருப்பதை புடின் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவிம் அதிக விலையுயர்ந்த எண்ணெய் விநியோகம் இருப்பதாக குற்றம் சாட்டிய புடின், ரஷ்யாவுடையது நிலையானது மற்றும் மலிவானது என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்ய மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்ததை தொடர்ந்து, இனி ரஷ்யாவிடமிருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் வாங்கும் நாடுகள், அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என புடின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here