மெக்ஸிக்கோவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 8 பேர் பலி

0

வட அமெரிக்கா நாடான மெக்ஸிக்கோவில் Michoacan மாநிலத்தின் அகுயிலா நகராட்சியில் 8 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் 8 ஆண்கள் தலை துண்டிக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

அகுயிலா நகராட்சியின் என்ராமாடா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

மோதல் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து என்ராமாடா பகுதியில் தடயவியல் மற்றும் சான்றுகள் சேகரிப்பு பிரிவின் ஊழியர்கள் ஆய்வு செய்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எட்டு பேரின் சடலங்களை கண்டறிந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களில், தலை துண்டிக்கப்பட்டு சடலங்கள் கிடப்பதை காட்டுகிறது.

பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக உடல்கள் தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் யுனைடெட் கார்டெல்ஸ் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், அவர்கள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்லின் உறுப்பினர்களுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டனர் என மெக்ஸிக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here