மெக்ஸிக்கோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த கதி..!

0

மெக்ஸிக்கோவில்எகுவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

காவற்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களில் சிலாவ் கிராமப்புற பகுதியில் நடத்தப்பட்ட ஐந்தாவது தாக்குதல் இதுவென காவல்துறை தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியுள்ளது.

இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2006 ஆண்டில் இருந்து மெக்ஸிக்கோவில் போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மெக்ஸிக்கோவில் 340,000 க்கும் அதிகமான கொலைகள் பதிவாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here