மெக்ஸிகோவில் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி தாக்குதல்….!

0

மெக்ஸிகோ சிட்டிக்கு வெளியே சிறிது தூரத்தில் பதுங்கியிருந்து துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், 13 மெக்சிகன் பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

Llano Grande பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது பட்டப்பகலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கொல்லப்பட்ட அதிகாரிகளில் 8 பேர் மாநில காவல்துறையினர், மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள்.

மெக்ஸிகோவின் தேசிய காவல்படை, இராணுவமயமாக்கப்பட்ட பொலிஸும், ஆயுதப்படைகளும் குற்றவாளிகளை நிலம் மற்றும் வான்வழியிலும் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here