மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து…!

0

மெக்ஸிகோ தலைநகரில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்து விபத்துக்குள்ளானது.

ரயில் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here